நேருக்கு நேர் வந்த 2 அரசு பேருந்துகள்.. 30க்கும் மேற்பட்ட பயணிகளோடு கவிழ்ந்ததால் அதிர்ச்சி

Update: 2024-11-10 03:03 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலூர் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. எதிரே வந்த மற்றொரு அரசுப் பேருந்தின் மீது மோதாமல், இருக்க ஓட்டுநனர் திடீரென பேருந்தை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இந்த விபத்தில், பயணம் செய்த மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். படுகாயம் அடைந்த 5-க்கும் மேற்பட்டோர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஒட்டுநர் மதுபோதையில் இருந்ததாக பயணிகள் குற்றம்சாட்டும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்