ரூ.4 ஆயிரம் சரிவு.. எதிர்பாரா வீழ்ச்சியில் தங்கம்.. மகிழ்ச்சியில் உலகம்..
ரூ.4 ஆயிரம் சரிவு.. எதிர்பாரா வீழ்ச்சியில் தங்கம்.. மகிழ்ச்சியில் உலகம்.. கையில காசு இருந்தா யோசிக்காதீங்க.. வாங்கி போடுங்க அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்ட பின் கடந்த 13 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 4 ஆயிரத்து 160 ரூபாய் சரிந்துள்ளது.
அக்டோபர் 31இல் தங்கம் விலை சவரனுக்கு 59 ஆயிரத்து 640 ரூபாயாக உச்சமடைந்தது.கிராம் 7 ஆயிரத்து 455 ரூபாயாக அதிகரித்தது.
நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
கார்ப்பரேட் வரிகளை குறைப்பார் என்ற எதிர்பார்ப்பில், சர்வதேச முதலீட்டாளார்கள் தங்கத்தில் இருந்து பங்கு சந்தைக்கு மாறி வருகின்றனர்.
இதனால் கடந்த 13 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 4 ஆயிரத்து 160 ரூபாய் குறைந்துள்ளது.
இன்று ஒரே நாளில் சவரனுக்கு 880 ரூபாய் சரிந்தது, 55 ஆயிரத்து 480 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.