அந்த ஒரு வசனம் தான் அடித்தளமே.. கம்மி விலையில் தங்கம்.. கம்பியை நீட்டிய பலே லேடி...!

Update: 2024-05-14 08:21 GMT

அந்த ஒரு வசனம் தான் அடித்தளமே

அப்படியே நம்பி வலையில் விழுந்த கூட்டம்

வாழைப்பழம் மாதிரி பேசி மொட்டை போட்ட லேடி!

ராணிப்பேட்டையில் கம்மி விலையில் தங்கம் என கூறி பெண் மோசடி செய்துவிட்டதாக மக்கள் புகார் அளித்திருக்கும் சூழலில்... மோசடி விவகாரத்தில் அரங்கேறியது என்ன என்பதை பார்க்கலாம்..

போஸ்டர்... கோரிக்கை மனுவுடன் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் வரிசையாக நிற்கும் இவர்கள்... வழக்கம்போல் உழைத்த காசை கோட்டைவிட்டுவிட்டு, காப்பாற்றுங்கள் என கோரிக்கை விடுப்பவர்களே...

சீட்டிங்கில் இது புதுசுனே என சொல்லும் அளவிற்கு... தங்கம் விற்கிற விலைக்கு... கிராமுக்கு ஆயிரம் ரூபாய் கம்மியாக தங்கம் தவறுவதாக கூறி மாந்தாங்கல் பகுதியை சேர்ந்த சசிகலா ஏமாற்றிவிட்டதாக சொல்கிறார்கள்...

ஈரோட்டில் இருக்கும் ஸ்ரீ பாலாஜி மார்க்கெட்டிங் நிறுவனம் வாயிலாக இந்த பிஸ்னஸ் நடப்பதாக சொல்லி சசிகலா நம்ப வைத்துவிட்டதாக சொல்கிறார்கள். 100 தங்க காயின் 4 அரை லட்சம் ரூபாய் என வசூல் செய்துவிட்டு... ஒரு 10 காயினை கொடுப்பார்கள்... மீதம் 90 காயினை கேட்டால் மேலும் துட்டை எடு என அலைக்கழித்ததாக சொல்கிறார்கள்.

எப்படி ஏமாந்தீர்கள் என கேட்டால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதையை சசிகலா அவிழ்த்துவிட்டதாக சொல்கிறார்கள். அதாவது சேட்டு பெயரை சொல்லி சசிகலா சேட்டை செய்துவிட்டதாக குமுறுகிறார்கள்.

மறுபுறம் கணவர் இல்லாத பெண்களை நைசாக பேசி கவிழ்ப்பதே சசிகலா திறமை என்கிறார் அவரால் பாதிக்கப்பட்ட தமிழரசன்... ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்தாச்சு என சொல்லும் தமிழரசன், இதுவரையில் சசிகலா கைது செய்யப்படவில்லை என்கிறார்.

மோசடி கதை வேறுப்பட்டாலும்... பின்னணியில் ஏமாற்றத்திற்கு அடித்தளம் சதுரங்க வேட்டை வசனம்... ஒருத்தர ஏமாத்தனும்னா... ஆசையை தூண்டனும் என்ற யுக்தி மட்டுமே...

இப்போது காசையும், காயினையும் கொடுக்காமல் சசிகலா டிமிக்கி கொடுப்பதாக சொல்லும் அவர்கள், மீறி வீட்டுப்பக்கம் போனால்... கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் எனவும் கண்ணீர் சிந்துகிறார்கள்

சின்ன சின்ன தொழிலை செய்து, உடலை வறுத்தி உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கடனையும் வாங்கி லட்சக்கணக்கில் கொடுத்துவிட்டதாக குமுறும் அன்றாட தொழில் செய்யும் தொழிலாளர்கள், கண்ணீர் வழிய கோரிக்கை மனுக்களை கலக்டர் ஆப்பிஸ் புகார் பெட்டியில் போட்டு சென்றிருக்கிறார்கள்...

அவர்களது கோரிக்கை எல்லாம் அரசு நடவடிக்கை எடுத்து... கஷ்டப்பட்டு சேர்த்த காசை மீட்டுக்கொடுக்கும் என்பதாகவே இருக்கிறது.

!

Tags:    

மேலும் செய்திகள்