மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புல்லட் - நீலகிரியில் திக்.. திக்.. | Bullet Elephant | Nilgiris

Update: 2024-12-28 03:40 GMT

கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் புல்லட் என்ற யானை 35க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்து வந்தது. புல்லட் யானையால் மக்கள் கடுமையாக அச்சம் அடைந்த நிலையில், யானையைப் பிடிக்க வனத்துறையினர் போராடி வந்தனர். இந்நிலையில், மூலக்கடை புதர் பகுதியில் இருந்த யானையை, அதிநவீன தெர்மல் ட்ரோன் கேமரா மூலமாக புலி, சிறுத்தைபோல் சத்தம் எழுப்பி சாலை ஓரத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து துப்பாக்கி மூலம் யானை மீது கால்நடை மருத்துவர் ராஜேஷ் மயக்க ஊசி செலுத்தினார். இதனால் புல்லட் யானை மயக்கம் அடைந்தது. பின்னர் யானையை சுற்றி வளைத்த வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் கால்களை கட்டினர். புல்லட் யானை பிடிக்கப்பட்டதால் பந்தலூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்