பஸ் ஸ்டாண்ட்டில் சேரில் அமர்ந்தபடி சிறுநீர் கழித்த போதை ஆசாமி - அதிர்ச்சி காட்சி
திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு "மேன்பவர்" நிறுவனம் நடத்தி வரும் சீனிவாசன் என்பவருக்கும், மற்ற கடைக்காரர்களுக்கும் தொழில் போட்டி நிலவி வந்ததாக கூறப்படுகிறது. வேலை தேடி வருபவர்களை அங்கு பேக்கரி கடை நடத்தி வருபவர், வேறு நிறுவனங்களுக்கு அனுப்புவதாக கூறி சீனிவாசன் கடந்த 19ம் தேதி மது போதையில் பேருந்து நிலையத்தில் இருந்த இரும்பு நாற்காலிகளை கீழே தள்ளியும், கண்ணாடி கதவுகளை உடைக்கவும் முற்பட்டார்... மேலும், பொதுமக்கள் செல்லும் இடத்தில் சேரில் அமர்ந்தபடி சிறுநீர் கழித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்... இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் சீனிவாசனை கைது செய்தனர்...