தனியார் நிதி நிறுவன நெருக்கடியால் ஓட்டுநர் தற்கொலை-போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் நெருக்கடியால் ஓட்டுனர் தற்கொலை செய்துக்கொண்டதால், அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாயல்குடி பள்ளிவாசல் தெருவில் சேர்ந்தவர் அமானுல்லா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனத்தில் த ன்னுடைய டாடா ஏஸ் ஆட்டோவிற்கு வாகனத்திற்கு கடன் வாங்கியுள்ளார். கடன் தொகை முழுவதையும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அபராத வட்டி என்ற பெயரில் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டிற்கு சென்று வீட்டை ஜப்தி செய்வதாக கூறியுள்ளனர். இதனைால் அவமானடைந்த அமானுல்லா, பூச்சிகொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டித்து தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அமனுல்லாவின் உடல் உடல்கூறு ஆய்வுக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு போலீசார் தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட அமானுல்லாவிற்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.