கத்திக்குத்து காரணமான புற்றுநோய்.. ஒரே சம்பவத்தால் கேன்சர் நோயாளிகளுக்கு வந்த சோதனை
மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மேற்கொண்ட போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், பணியிடங்களில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டத்தால் வெளி நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மருத்துவரை பார்ப்பதற்காக பதிவு செய்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்த நோயாளிகள், சிகிச்சை பெறாமலேயே அங்கிருந்து புறப்பட்டனர்.மருத்துவர்களின் போராட்டம் காரணமாக தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. மருத்துவர் இல்லை என்றாலும், அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுவதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.