தீபாவளி பண்டிகையையொட்டி மதுவிற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு தமிழக அரசு முன்னேற்பாடு பணி மேற்கொள்வது மக்கள் நலனுக்கு எதிரானது என்று நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக, மூவாயிரத்து 500 கடைகளில் கூடுதல் கவுண்டர்கள் அமைத்தல் போன்ற வியாபார உத்திகளை அறிவித்திருப்பது மதுவிலக்கு குறித்த அரசின் நோக்கத்தை சந்தேகிக்க வைப்பதாக கூறியுள்ளார். எனவே, மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.