ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள காவா குளம் கிராமத்தை சேர்ந்தவர் கிஷோர் ராம். இவரது மேல்படிப்பிற்கு லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. இதற்காக ராமநாதபுரம் ஸ்டேட் வங்கியில் கல்விக்கடன் வாங்க ஆவணங்கள் சமர்பித்துள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாகவும், கடைசி நேரம் வரை தனக்கு காரணமே தெரிவிக்காமல், கல்விக்கடன் வழங்காமல் தவிர்த்துவிட்டார்கள் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.