பிரசவத்தின் போது தாயும், சேயும் பலி - அதிர்ச்சியில் உறவினர்கள்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Update: 2024-11-13 13:54 GMT

தர்மபுரி மாவட்டம் பழையபுதுரெட்டியூர் பகுதியை சேர்ந்த சந்தியா என்ற திருமணமான பெண், இரண்டாவது முறையாக கருவுற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரசவ வலி வந்ததால், தருமபுரி குமாரசாமிபேட்டையில் தனியார் மருத்துவமனையில், சந்தியாவை உறவினர்கள் சேர்த்துள்ளனர். ஆனால் குழந்தை இறந்து பிறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியதாகவும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் மருத்துவமனையை கண்டித்து, சந்தியாவின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததும், கவனக்குறைவுமே தாய்சேய் இறப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். தகவலறிந்து விரைந்த வருவாய் மற்றும் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்