வீட்டின் கூரைகளை பிய்த்து எறிந்து அட்டகாசம்..பெண்களை இழுத்து தள்ளிய அதிகாரிகள்..

Update: 2024-05-11 02:50 GMT

வீட்டின் கூரைகளை பிய்த்து எறிந்து அட்டகாசம்..பெண்களை இழுத்து தள்ளிய அதிகாரிகள் ..உடைந்த குழந்தையின் கை..கர்ப்பிணி காயம் - தருமபுரியில் அதிர்ச்சி

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே, வனப்பகுதியில் குடியிருக்கும் குடும்பங்களை வனத்துறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உட்பட்ட

பென்னாகரம் அருகே உள்ள ஏமனூர், சிங்காபுரம், மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்களும், விவசாயிகளும் பல தலைமுறைகளாக குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், ஒகேனக்கல் அருகே உள்ள, எடத்திட்டு, வேப்பமரத்து கோம்பு ஆகிய பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். கடந்த ஐந்து தலைமுறைகளாக குடியிருந்து வரும் அவர்கள், வனப்பகுதி நிலத்தில் குடியிருப்பதாக கூறி வனத்துறையினர், வ லுக்கட்டாயமாக வெளியேற்றினர். வீடுகளின் கூரைகளை பிரித்து, எறிந்தும், வீட்டில் இருந்த பெண்களை வெளியே இழுத்து தள்ளியும் வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்