கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற பிரத்யேக ஏ.டி.எம். கார்டு

Update: 2023-09-14 11:27 GMT

வேலூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக 6 ஆயிரம் பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகள் வந்துள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். வேலூர் மாவட்டத்தில், மகளிர் உரிமைத் தொகை பணத்தை பெறுவதற்காக, வங்கிகள் மூலம் 8 ஆயிரம் பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகளில், முதற்கட்டமாக 6 ஆயிரம் ஏ.டி.எம். கார்டுகள் வந்துள்ளன. இவற்றை காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு மற்றும் வேலூரில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்