யாரையும் விட்டு வைக்காத மர்ம காய்ச்சல்.. அலறியடித்து ஹாஸ்பிடலுக்கு வந்த மக்கள். கடலூரில் அதிர்ச்சி

Update: 2024-11-11 12:55 GMT
  • கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, தொழுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் சிகிச்சைக்காக குவிந்தனர். கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் மர்ம காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரங்கூர், ராமநத்தம், வைத்தியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக குவிந்தனர். பணியில் ஒரு மருத்துவர் மட்டுமே இருந்ததாக கூறப்படும் நிலையில், நோயாளிகள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
Tags:    

மேலும் செய்திகள்