சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
யாதவ சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், வழக்கறிஞர் காசிராஜன் அளித்த புகார் மனுவில், சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த விவகாரத்தில் யாதவ அமைப்பை சேர்ந்த பலரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.