#chidambaram | #schoolbus
பள்ளி வேனில் நடந்த சம்பவம்... அலறிய மாணவர்கள்...அதிர்ச்சியில் பெற்றோர்
சிதம்பரம் அருகே ராமநாதன் குப்பம் பகுதியில், 35 மாணவர்களுடன் தனியார் பள்ளி வேன் ஒன்று பின்பக்கமாக நகர்ந்த போது, அங்கு இருந்த மின் கம்பத்தில் மோதியதில் மின் கம்பம் இரண்டாக உடைந்தது. இதனால் வேனில் இருந்த மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய துறை அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்ததால், பெரும் அசமாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.