அரசு பேருந்தில் பெண் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி - சென்னையில் பேரதிர்ச்சி சம்பவம்
அரசு பேருந்தில் பெண் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி - சென்னையில் பேரதிர்ச்சி சம்பவம்
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் பயணம் செய்த பெண் பயணிக்கு திருவான்மியூர் அருகே வந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் நடத்துனர் முத்துக்குமாரிடம் தெரிவித்திருக்கிறார். உடனடியாக சம்பவ இடத்தின் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த திருவான்மியூர் போக்குவரத்து காவல்நிலைய காவல் ஆய்வாளர் அசோகனிடம் தகவல் தெரிவித்ததையடுத்து பெண் பயணியை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.