நாடே நடுங்கிய ரயில் விபத்து... ஒருவரை கூட இழந்து விட கூடாது...உயிரை கொடுத்து மீட்ட தமிழர்கள்

Update: 2024-10-12 14:31 GMT
  • நாடே நடுங்கிய ரயில் விபத்து... ஒருவரை கூட இழந்து விட கூடாது... உயிரை கொடுத்த தமிழர்கள் - அந்த மனசுதான் சார் கடவுள்
  • நாட்டையே உலுக்கிய, மைசூரு-தர்பங்கா ரயில் விபத்தில் இருந்து மீண்டது எப்படி ? களத்தில் இருந்த மக்கள் கூறுவது என்ன ? ரயில் ஓட்டுநர்களின் கதி என்ன ?என்பதை பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
  • ஒடிசா ரயில் விபத்தை கண்முன் காட்டும் இந்த கோர விபத்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிஅடுத்த கவரப்பேட்டையில் அரங்கேறியது...
  • கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த மைசூர் - தர்பங்கா விரைவு ரயில் மோதியது....
  • மோதிய வேகத்தில் 10க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம் புரள...முன்னால் இருந்த ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்தது..
  • சிதறிக் கிடக்கும் ரயில் பெட்டிகள், தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டி என உருகுலைந்து கிடந்த காட்சி.... காண்போர் மனதை பதைபதைக்கவே செய்தது...
  • இந்த கோர விபத்தில் எத்தனை உயிர்கள் துடித்ததோ ? எப்படி மீளப்போகிறோமோ ? என்ற பயம் பலரையும் தொற்றிக் கொள்ள.... மக்களை மீட்க ஒன்றிணைந்தது மனிதம்...
  • ரயில் விபத்து நடந்த சில நேரத்திலேயே ஒன்று திரண்ட பகுதிவாசிகள், ரயிலுக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்கத் தொடங்கினர்..
  • ஏசி பெட்டியில் இருந்த கண்ணாடிகளை உடைத்து பலரை மீட்ட நிலையில், உயிர் பயத்தில் இருந்தவர்களையும் போரட்டி மீட்டுள்ளனர் அப்பகுதிவாசிகள்...
  • தொடர்ந்து மீட்பு படையினருக்கும் உறுதுணையாய் இருந்து மீட்பு பணிகளை துரிதமாக முடிக்க உதவினர்..
  • இதில் மீட்கப்பட்ட மக்கள், பலர், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர், பேருந்து மற்றும் சிறப்பு ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • மேலும் சிலர் சிறப்பு ரயில் மூலம் தர்பங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..
  • மீட்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தோம் என நிம்மதி பெருமூச்சு விட்டாலும், அதன் தாக்கத்தில் இருந்து மீளவில்லை என்றே கூறலாம்....
  • இந்த விபத்தில் தீவிர காயமடைந்த 3 பயணிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், சிறிதளவு காயமடைந்த 7 பயணிகள் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்..
  • நாட்டையே பதறச் செய்த இந்த ரயில் விபத்தில், ரயிலின் ஓட்டுநர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை உயிர் பலிகள் பதிவாகவில்லை என்பது மட்டுமே ஒரே ஆறுதலாக அமைந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்