பல பெண்களுடன் உறவு.. நடந்தது என்ன? - மாறி மாறி போட்டுடைத்த அகோரி கலையரசன் மற்றும் மனைவி
யுடியூப் சேனல்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரபலமான சாமியார் அகோரி கலையரசனுக்கும் அவருடைய மனைவி பிரக லட்சுமிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அகோரி கலையரசன் கடந்த மாதம் 28-ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.
அந்த வழக்கு புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, அகோரி கலையரசன் மற்றும் பிரகலஷ்மி ஆகிய இருவரையும் போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அகோரி கலையரசன், தனது மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தன்னை ஆயுதங்கள் தாக்கியதாகவும், தவறான தொழில் செய்ய சொல்லி துன்புறுத்ததாகவும் கூறினார்.
விசாரணக்குப் பின் வெளியே வந்த அகோரி, தான் கொடுத்த புகார் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், தனது மனைவியிடம் இருந்து நீதிமன்றத்தில் சென்று விவாகரத்து பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஆனால், தன்னையும் தனது தம்பியையும் கலையரசன் தாக்கிகயாதகவும், தனது விவாகரத்து தொடர்பான விஷயங்களை நீதிமன்றம் சென்று அணுகும்படி காவல் துறை தரப்பில் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.