புது மாப்பிள்ளை தலைமேல் தொங்கிய எமன்... மகனின் கடைசி நொடியை நினைத்து கதறிய தாய் - இப்படி ஒரு சாவா?
புது மாப்பிள்ளை தலைமேல் தொங்கிய எமன்... மகனின் கடைசி நொடியை நினைத்து கதறிய தாய் - இப்படி ஒரு சாவா?
பீதியில் சென்னை மக்கள்
சென்னை பட்டினப்பாக்கத்தில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் நான்காவது தளத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரத்தை சேர்ந்தவர் 27 வயதாகும் குலாப். இவருக்கு, அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து, 4 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் வீட்டுக்கு வந்த போது, குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் 4வது தளத்தில் இருந்த பால்கனி இடிந்து விழுந்தது. இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் குலாப் சரிந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், குலாபை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி குலாப் உயிரிழந்ததால், அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
உயிரிழந்த குலாபின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், தங்களுக்கு தெரிவிக்காமல் எப்படி அனுப்பலாம் என கேள்வி எழுப்பியும், பிணவறை கதவை தட்டியும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே இதுபோன்று நடந்துள்ளதாக தெரிவித்துள்ள உறவினர்கள், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
எப்போது இடிந்தாலும் பேட்ச் ஒர்க் தான் செய்வதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.