குழந்தையின் சிகிச்சைக்கு சென்னை சென்ற மனைவி - அதிர வைத்த பூட்டிய வீட்டிற்குள் இருந்த கணவனின் நிலை

Update: 2024-11-09 16:26 GMT

மணலி விளையில் வசித்து வரும் 38 வயதான மார்ட்டின் மொபைல் கடை நடத்தி வந்தார்.

மார்ட்டின் - ஆகி பியூலா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள உள்ளனர். மூத்த குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தாய் பியூலா, சிகிச்சை அளிக்க சென்னைக்கு சென்றுள்ளார். மார்ட்டின் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில், மார்ட்டின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள், மார்ட்டின் வீடு மூன்று நாட்களாக பூட்டிய நிலையில் இருப்பதாகவும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து, கதவை திறந்து பார்த்தபோது, மார்ட்டின் வீட்டின் நடு அறையில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இறந்து மூன்று நாட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மார்ட்டின் எப்படி இறந்தார்? அதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்