கோயம்பேட்டில் அதிர்ச்சி.. இப்படியும் சாவு வருமா? - டிபன் சாப்பிடும் போதே துடிதுடித்து பிரிந்த உயிர்
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகன். 35 வயதான இவர், கொரியர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு மதுரையிலிருந்து சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திற்கு கொரியர் லாரியை ஓட்டி வந்தார். காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வந்தடைந்த அவர், பின்னர் அருகே இருந்த உணவகம் ஒன்றில் காலை உணவை அருந்தினார். அப்போது திடீரென அவருக்கு வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டது. இதனால் தனது லாரியில் இருந்த தண்ணீரை எடுத்து பருகுவதற்காக சென்ற அவர், லாரியின் முன்னர் விழுந்து பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார், உயிரிழந்த ஓட்டுனரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்