சென்னை குழந்தைக்காக தன் இதயத்தை கொடுத்த கோவை குழந்தை

Update: 2024-05-31 07:02 GMT

கோவையில் கடந்த 24ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனிடையே, சென்னையில் தனியார் மருத்துவமனையில் ஒரு வயது பெண் குழந்தைக்கு இதய மாற்று சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கோவையில் உயிரிழந்த சிறுமியின் இதயத்தை தானமாக வழங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து கோவையில் இருந்து விமானம் மூலம் குழந்தையின் இதயம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, ஏற்கனவே தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்