டாக்டராகும் சென்னை கான்ஸ்டபிள்.. கோச்சிங்கே போகாமல் நீட் தேர்வில் அசால்ட் - சல்யூட் அடித்தவர் செல்பிக்கு போட்டி போடும் அதிகாரிகள்

Update: 2023-07-28 05:43 GMT


சென்னையில் நடந்த மருத்துவ படிப்பு சேர்க்கை கலந்தாய்வில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முதல் மாணவர்கள், பொதுமக்கள் அனைவரின் கவனத்தையும் ஒரு இளைஞர் ஈர்த்திருக்கிறார். இவரைப் பற்றிய சுவாரசிய தகவல்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

சென்னை கிண்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான எம் பி பி எஸ் - பி டி எஸ் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது. 700 இடங்களுக்கு சுமார் 1600 மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.

கலந்தாய்வில், திடீரென ஒரு இளைஞர் மீது அனைவரின் பார்வையும் விழுந்தது. ஒல்லிய, குழி விழுந்த கண்களோடு காணப்பட்ட அவர், மாணவராக தெரியவில்லை. எனினும் ஆர்வத்தோடு, அவரை பலரும் பாராட்டினர். அங்கிருந்த காவலர்களும், அந்த இளைஞரை பாராட்டி அவரோடு செல்பியும் எடுத்துக் கொண்டது தான் ஹைலைட் .

இது குறித்து விசாரித்தபோதுதான், போலீஸ் டூ டாக்டர் என்ற சுவாரஸ்ய தகவல் கிடைத்தது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா முதுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்தான் சிவராஜ் . 24 வயதான இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை ஆவடியில் உள்ள சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். காவலராக பணியில் சேர்ந்தாலும், மருத்துவராக வேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்துள்ளது.

2016 இல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த சிவராஜ் , ஒரு பட்டப் படிப்பையும் முடித்துவிட்டு காவலர் பணியில் சேர்ந்து இருக்கிறார். கடந்தாண்டு நீட் தேர்வு எழுதிய இவர் 268 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். இடம் கிடைக்காத நிலையில் இந்த ஆண்டு மீண்டும் எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல், வேலைக்கு நடுவே புத்தகங்களை படித்து தீவிரமாக தயாராகி இருக்கிறார் . இதன் காரணமாக 400 மதிப்பெண்களை பெற்ற இவர், கலந்தாய்வில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்திருக்கிறது. அனைவரது பார்வையும் இவர் மீது திரும்பியதன் காரணமே இதுதான். இனி என்ன செய்யப் போகிறார் .....அவரிடமே கேட்டோம்....

முயற்சி எப்போதும் கைவிடாது என்பதற்கு உதாரணம் சிவராஜ் தான். அவரின் வழியை பின்பற்றினால் இலக்கை அடையாளம். கனவும் நிறைவேறும் என்பது நிச்சயம்.


Tags:    

மேலும் செய்திகள்