சென்னை மணிக்கூண்டு... "இப்படி ஒரு வரலாறா..?"
புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, சென்னை மெரீனா காமராஜர் சாலையில் 35 ஆண்டு காலமாக இயங்கி வரும் மணிக்கூண்டு, மலர் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சன் நிறுவனம், கடந்த 1991-ஆம் ஆண்டு இந்த மணிக்கூண்டு கடிகாரத்தை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நிறுவியது.
லண்டனில் இருந்து 15 லட்சம் ரூபாய் செலவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த மணிக்கூண்டு மோட்டார் மூலம் 35 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் பேட்டரி மூலம் இந்த மணிக்கூண்டு இயக்கப்பட்டு வரும் நிலையில், புத்தாண்டை ஒட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மெட்ரோ பணிகள் முடிந்த பிறகு அந்த இடத்தில் புதிய மணிக்கூண்டை நிறுவ இருப்பதாக சிம்சன் நிறுவனத்தின் முதன்மை தலைமை பொறியாளர் ரவி சர்மா கூறியுள்ளார்.