நள்ளிரவில் திணறிய கிளாம்பாக்கம் - மூச்சு விட முடியாத அளவுக்கு முண்டியடித்து ஏறும் மக்கள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சொந்த ஊர் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். வார விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை நோக்கி செல்லக்கூடிய பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு ஒரு சில பேருந்துகளே இயக்கப்பட்டதால் பேருந்தின் ஜன்னல் வழியாக முண்டியடித்தபடி பயணிகள் இடம் பிடித்தனர். இதனால் பயணிகள் கடும் அவதி சிரமத்திற்குள்ளாகினர்.