சென்னை புளியந்தோப்பை சேர்ந்த அலீனா என்ற திருநங்கை, பாஜக மகளிர் அணி செயலாளரின் மகளான தமிழரசி என்பவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தமிழரசியிடம் இதுவரை 20 லட்சம் கடன் வாங்கியுள்ளதாகவும், ஆனால் அதற்கு 32 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தியுள்ளதாகவும் அலீனா தெரிவித்துள்ளார். தமிழரசியும் அவரது கணவரும் மேலும் பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் அலீனா புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மேலும் சில திருநங்கைகள் தமிழரசி மீது கந்துவட்டி புகார்களை அளித்துள்ளனர். இதையடுத்து தமிழரசி மற்றும் அவரது கணவர் மணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.