காட்டுக்குள் நோட்டமிடும் AI! ஒவ்வொரு நகர்வும்! இன்ச் பை இன்ச்சாக!லேசாக அசைந்தாலும் ஊரே அலற அடிக்கும்
ஆயிரத்து 500 சதுர கிமீ பரப்பளவு கொண்ட ஓசூர் வனக்கோட்டத்தில், 400க்கு மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்கின்றன. அவை, தண்ணீர் மற்றும் உணவு தேடி வருவதால், உயிர் சேதம் பயிர்சேதம் ஏற்படுகிறது. இதனால், யானைகள் வருவதை தடுக்க, அகழி, மின்சார வேலிகள், இரும்பு கம்பிகள் உட்பட பல்வேறு தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. ஆனாலும், யானைகள் வருவது தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில், யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க AI தொழில் நுட்பத்தில் கட்டுப்பாட்டு மையத்தை ஒசூர் வனத்துறையினர் அமைத்துள்ளனர். 17 இடங்களில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் யானைகள் வருகையை கண்டறிந்து, மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். யானைகள் வருவதும், அதனை கண்காணிப்பது குறித்தும், வனத்துறையினர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.