"ஆவின் பால் விலை மறைமுகமாக உயர்கிறதா..?" குற்றம் சாட்டிய அன்புமணி ராமதாஸ்

Update: 2024-10-19 02:52 GMT

"ஆவின் பால் விலை மறைமுகமாக உயர்கிறதா..?" குற்றம் சாட்டிய அன்புமணி ராமதாஸ்

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்த மூன்றாண்டுகளில் தற்போது மூன்றாவது முறையாக பால் விலை உயர்த்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022-ல், ஆரஞ்சு வண்ண உறையில் விற்கப்படும் பாலின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டது. கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் 44 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி 50 ரூபாய்க்கு விற்க்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது பச்சை நிற உறை பாலின் அளவை குறைத்து, 11 ரூபாய் விலை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் கையாளும் யுக்தியை அரசு நிறுவனம் கையாள்வது ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்ட அவர், கிரீன் மேஜிக் பிளஸ் திட்டத்தை கைவிட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்