7/ஜி ரெயின்போ காலனி 2 - அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Update: 2025-01-01 12:12 GMT

7 ஜி ரெயின்போ காலனி 2 கைவிடப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் படக்குழுவினர்... 2004ல் செல்வராகவன் இயக்கத்தில்

ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளிவந்த படம் 7ஜி ரெயின்போ காலனி. இத்திரைப்படத்தின் 2ம் பாகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்க முடிவு செய்யப்பட்டது. படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா தான் கதாநாயகனாக நடித்து வந்தார். சமீபத்தில் செல்வராகவனுக்கும், ரவி கிருஷ்ணாவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல் உலா வந்த நிலையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக படக்குழுவினர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த 2வது பாகத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்... முதல் பாகம் வெளிவந்த போது இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்தது...

Tags:    

மேலும் செய்திகள்