நாடாளுமன்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி வகுப்பு சென்னையில் தொடங்கியது.

Update: 2024-01-30 10:03 GMT

சென்னை ரிப்பன்மாளிகை வளாகத்தில் மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ராதாகிருஷ்ணன் இந்த பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மக்களவை தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். வேட்புமனு தாக்கல், வேட்புமனுக்கள் பரிசீலனை, சின்னங்கள் ஒதுக்கீடு, தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்துவது, விதிமீறல்கள் குறித்து புகார் அளிப்பது குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்