சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி பகுதியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை துவக்கி வைத்த பின் பேட்டி அளித்த தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக், காவல் துறை நடத்திய அதிரடி சோதனையில்140 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என்றார். அத்துடன் தாம்பரம் மாநகரில் என்கவுண்டர் இருக்குமா? என்ற கேள்விக்கு, யாருக்கு எதை கொடுக்க வேண்டுமோ, அதை கொடுப்போம் என்று தெரிவித்தார்