விஜய் சொல்ல போகும் `குட்டி கதை' "வெயிட்டிங்லயே வெறி ஏறுது.." தொண்டர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Update: 2024-10-27 03:07 GMT

விஜய் சொல்ல போகும் `குட்டி கதை' "வெயிட்டிங்லயே வெறி ஏறுது.." தொண்டர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டு திடலுக்கு, இன்று மாலை 3.15 மணிக்கு மேல் விஜய் வருகை தரவுள்ளார். தொடர்ந்து 100 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றும் விஜய், மேடையில் ரேம்ப் வாக் சென்று தொண்டர்களுக்கு மத்தியில் கையசைத்து வணக்கம் தெரிவிக்க உள்ளார். பின்பு தவெக நிர்வாகிகளை மேடையில் அறிமுகம் செய்து வைத்து, கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள வாகை மலர், போர் யானைகள் குறித்த காரணத்தையும், கட்சியின் கொள்கை மற்றும் விதிகளையும் வெளியிட இருக்கிறார். தொடர்ந்து 45 நிமிடம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை பேசவுள்ள விஜய், பல்வேறு அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளியிட இருப்பதாகவும், திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா போன்று, அரசியல் குட்டிக்கதையும் சொல்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்