ராமேஸ்வரம் ரயில் வரும் போது ஒதுங்கி நின்றவர் கோர மரணம்.. ரயில் கூடவே நடந்து செல்வோர்ஜாக்கிரதை

Update: 2024-10-27 05:12 GMT

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து ப்ரேக் ஷூ-வின் பட்டை கழன்று போய், அசுர வேகத்தில் தலையில் பட்டதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மனதை ரணமாக்கி உள்ளது.. பார்க்கலாம்.. விரிவாக..

ராமநாதபுரம் அருகே உள்ள சத்திரக்குடியை அடுத்த எட்டிவயல் ரயில்வே தண்டவாளத்தில் தான், இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது..

சத்திரக்குடி அடுத்த எட்டிவயல் பகுதியைச் சேர்ந்தவர், விவசாயி சண்முகவேலு. இவர் வழக்கம்போல, விவசாய வேலைக்காக தனது தோளில் மண்வெட்டியுடன், விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்து உள்ளார்..

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி அந்த வழியாக வந்து கொண்டிருந்த Rameswaram Madurai Passenger ரயில் வந்துள்ளது. அப்போது, அந்த ரயிலின் ப்ரேக் ஷூ-வின் 10 கிலோ எடை கொண்ட இரும்பு பட்டை ஒன்று ரயிலில் இருந்து கழன்று தெறித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனால், கண்ணிமைக்கும் நேரத்தில்.. இந்த பட்டை அசுர வேகத்தில் சண்முகவேலுவின் தலையில் பலமாக விழுந்துள்ளது...

இதில், உருக்குலைந்த விவசாயி சண்முகவேலு.. சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டுபோய் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இறந்த விவசாயி சண்முகவேலுவின் உடல், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த சம்பவம் குறித்து கேட்டபோது, "ரயிலில் இருந்து எந்த Parts-ம் கழன்று விழ வாய்ப்பு இல்லை. இருப்பினும், இது பற்றி தற்போது உயர் அதிகாரிகள் முன்னிலையில் தீவிர விசாரணை நடந்து வருவதாக" தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் மண்டல செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்..

இதனிடையே, விபத்தில் உயிரிழந்த விவசாயி சண்முகவேலுவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் கைப்பற்றப்பட்ட இரும்பு பட்டை, ரயிலில் இருந்தது தானா? விவசாயியின் இறப்புக்கு உண்மையான காரணம் என்ன? என்பன உள்ளிட்டவை காவல்துறை மற்றும் ரயில்வே நிர்வாகத்தின் விசாரணைக்குப் பின்பே தெரியவரும்...ராமேஸ்வரம் ரயில் வரும் போது ஒதுங்கி நின்றவர் கோர மரணம்.. ரயில் கூடவே நடந்து செல்வோர்ஜாக்கிரதை


Tags:    

மேலும் செய்திகள்