கரைசேர்த்த சூர்யகுமார் யாதவ் - ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி
டி20 உலகக்கோப்பையில் அமெரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் -8 சுற்றுக்கு தகுதி பெற்றது.நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.இந்திய அணியின் அபார பந்துவீச்சால், அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே குவித்தது.வேகத்தில் மிரட்டிய அர்ஷ்தீப் சிங், வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.111 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், விராட் கோலி முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.ரோகித் சர்மா 3 ரன்களிலும், ரிஷப் பண்ட் 18 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது.நிதானமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே ஜோடி, இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, குரூப் ஏ பிரிவில் 3 வெற்றிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.