`நீங்க இங்கயே தங்கினாலும்..` - காரசாரமாக பேசிய உதயநிதி

Update: 2024-04-08 05:43 GMT

2026 சட்டமன்றத் தேர்தல் வரை தமிழகத்திலேயே பிரதமர் மோடி தங்கி இருந்தாலும், தமிழகத்தில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாது என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். நாமக்கல் பூங்கா சாலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், நாமக்கல்லுக்கு விரைவில் நிறைவேற்றப்பட உள்ள பல்வேறு அரசு நலத்திட்டங்களை எடுத்துரைத்தார். மேலும் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசிய உதயநிதி ஸ்டாலின்,

அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக திராவிட மாடல் அரசு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் தமிழகத்திற்கு மத்திய பாஜக அரசு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்றும், பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்