நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்.. பார்லிமென்டில் கொந்தளித்த திருச்சி சிவா
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், அமைப்பு ரீதியிலான பிரச்சினை எதுவும் இல்லை என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், அரசு ஊழியர்கள் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, திமுக எம்பி திருச்சி சிவா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார், நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், அமைப்பு ரீதியிலான பிரச்சினை எதுவும் இல்லை என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்திருப்பதாக கூறினார். ஒருவேளை அமைப்பு ரீதியான பிரச்சினை இருப்பதாக கூறினால், அது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.