திருப்போரூர் பகுதியில் பஞ்சமி நிலம் மீட்பு, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வரும் 16ம் தேதி அமைதிப் பேரணி மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி கோரி, நாம் தமிழர் கட்சியினர் திருப்போரூர் காவல் நிலையத்தில் கடந்த 3 ஆம் தேதி கடிதம் கொடுத்தனர். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில் அனுமதி கோரி, திருப்போரூர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.