சீமான் பற்றிய கேள்வி..! ஒரே வார்த்தையில் Dy.CM உதயநிதி கொடுத்த நச் பதில் | Seeman
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்கு தாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். குடியரசு தின விழா அணிவகுப்பு பேரணியில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்தார். சீமான் பற்றிய கேள்விக்கு, தாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.