18-வது மக்களவையின் முதல் கூட்டம் தொடங்கியதும், இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப், தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்க தொடங்கினர். பாஜக எம்.பி.க்களின் பலத்தை கைத்தட்டல், முழக்கங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.