கால் பதிக்க துடிக்கும் தேசிய கட்சிகள்.. கால் பதிக்க துடிக்கும் தேசிய கட்சிகள்..

Update: 2024-03-05 02:13 GMT

கெத்து காட்டும் மாநில காட்சிகள்..

கால் பதிக்க துடிக்கும் தேசிய கட்சிகள்..

1967க்கு பின் காங். கையை விட்டுப்போன மாநிலங்கள்

நாடு சுதந்திரம் அடைந்த1947 முதல் 1967 வரை ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது.

1967க்கு பிறகு ஒடிசா, தமிழகம், ஆந்திர பிரதேசம், பஞ்சாப்

ஹரியானா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநில

கட்சிகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கு வங்கம், ஜார்கண்ட்

இந்த பட்டியலில் இணைந்தன.

இவற்றில் ஒரு சில மாநிலங்களில் ஒரு பலம் வாய்ந்த

மாநில கட்சியும், ஒரு தேசிய கட்சியும் கோலோச்சுகின்றன.

1967க்கு பிறகு தமிழகத்தில் தேசிய கட்சிகள் எதுவும் வெற்றி

பெற்று, ஆட்சியமைக்க முடியவில்லை என்பதால், இந்திய

அளவில் தமிழகம் தனித்துவம் கொண்ட மாநிலமாக உள்ளது.

1983 வரை காங்கிரஸ் கோட்டையாக இருந்த ஆந்திராவில்

1983ல் என்.டி.ஆர் தலைமையில் தெலுங்கு தேசம்

கட்சி ஆட்சியை பிடித்தது. 1989 முதல் 2014 வரை தெலுங்கு தேசமும், காங்கிரஸும் மாறி மாறி ஆட்சி செய்தன.

2014 தேர்தலில் தெலுங்கு தேசமும், 2019 தேர்தலில்

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் வென்றன. தற்போது காங்கிரஸ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கோட்டையாக இருந்த ஒடிசாவில், 2000ஆம்

ஆண்டு முதல் நவீன் பட்நாயக் தலைமையிலான

பிஜு ஜனதா தளம், கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து

ஆட்சி செய்து வருகிறது.

2000ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜார்காண்ட்

மாநிலத்தில் ஜார்காண்ட் முக்தி மோர்ச்சாவும், பாஜகவும்

மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. தற்போது ஜார்காண்ட் முக்தி மோர்சா ஆட்சியில் உள்ளது.

1977 வரை காங்கிரஸ் கோட்டையாக திகழ்ந்த

மகாராஷ்ட்ராவில், 1978ல் சரத் பவார் தலைமையிலான

இந்தியன் சோசியலிஸ்ட் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

1980 முதல் 1999 வரை காங்கிரசும், சிவ சேனாவும் ஆட்சி செய்தன். அடுத்த 10 ஆண்டுகள் காங்கிரஸும், பாஜகவும்

ஆட்சி செய்தன. தற்போது மாநில கட்சியான சிவ சேனா ஆட்சி செய்து வருகிறது.

2011 வரை காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் கட்சிகளின்

ஆட்சியில் இருந்த மேற்கு வங்கத்தில், 2011 முதல் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்