பெண் செய்த செயல்... ஒரு நொடி பதறிப்போன அமைச்சர் மா.சு.

Update: 2024-11-13 04:23 GMT

காலில் விழுந்து கோரிக்கை மனு அளித்த மூதாட்டியை, அமைச்சர் மா. சுப்பிரமணியன் உதவியாளர் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில், கேன்சர் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் கருவியின் பயன்பாட்டை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அங்கு வந்திருந்த மூதாட்டி, தமது கணவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்து வருவதாகவும், அந்த சிகிச்சை அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரும்படியும் காலில் விழுந்து கோரிக்கை மனு அளித்தார். அதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் மா சுப்பிரமணியன், அந்த மூதாட்டியை தமது உதவியாளர் வாகனத்தில் கோவை அரசு மருத்துவமனைக்கு வருமாறு கூறி அழைத்துச் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்