மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தாம் இன்று மகாராஷ்டிரா மாநிலம் சிக்லி நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த நிலையில் , விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தன்னால் அங்கு வர முடியவில்லை என தெரிவித்து, மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும், இந்தியா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும் சோயாபீன்ஸ் மற்றும் பருத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.