முதன்முறையாக பாஜக அலுவலகத்தில் மன்னர் ! காரணம் இதான்! யதுவீர் சொன்ன தகவல்

Update: 2024-03-14 12:30 GMT

கர்நாடக மாநிலத்தில் மைசூரு அரச குடும்பத்தின் 27-வது மன்னராக இருப்பவர், யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார். இவர் மைசூரு நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு முதன்முறையாக சென்ற யதுவீர், உள்ளூர் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பாஜகவுக்கு நன்றி தெரிவித்துள்ள யதுவீர், தனது கொள்கைகளும் தொலைநோக்கு பார்வையும் பாஜகவைப் போலவே இருப்பதாகவும், அதன் காரணமாகவே பாஜகவில் சேர முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்