கள்ளச்சாராயம் காய்ச்சி லேபர்களுக்கு கொடுத்த மரக்கடை ஓனர்.. செங்கல்பட்டில் அதிர்ச்சி
மழுவங்கரனை பகுதியில் தேவன் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி, அதனை தனது மரக்கடையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார், திடீர் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் 10 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டறியப்பட்டு, அழிக்கப்பட்டது. பின்னர், அந்த கள்ளச்சாராயத்தை அருந்திய 3 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தேவனுடைய கள்ளச்சாராயத்தை அருந்திய மேலும் 2 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயத்தை அருந்திய 5 பேரும், தற்போது நலமுடன் உள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.