கண் சிவந்த அமைச்சர் அமித்ஷா.. கோபத்தில் கையில் எடுத்த சபதம்

Update: 2024-11-11 12:40 GMT
  • செரைகேலாவில் பிரசாரம் செய்த அமித்ஷா, ஜார்க்கண்டில் ஊடுருவல்காரர்களை அடையாளம் காண கமிஷன் அமைக்கப்படும், அவர்கள் வெளியேற்றப்படுவார்கள், அவர்களிடம் இருந்து நிலங்கள் திரும்பப்பெறப்படும் என்றார். ஊடுருவல்காரர்கள் பழங்குடியின பெண்களை திருமணம் செய்தால், பெண்களின் சொத்துக்கள் ஊடுருவல்காரர்களுக்கு செல்லாத வகையில் சட்டம் கொண்டுவரப்படும் எனவும் அமித்ஷா தெரிவித்தார். ஜார்க்கண்ட் முழுவதும் ஊடுருவல்காரர்களால் பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், இந்த பிரச்சினையை எழுப்பியதற்காக சம்பாய் சோரனை, முதல்வர் பதவியிலிருந்து ஹேமந்த் சோரன் நீக்கினார் எனவும் அமித்ஷா குற்றம் சாட்டினார். ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியமைத்தால், மாநில இளைஞர்கள் வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படாது எனவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்