காசா மருத்துவமனை தாக்குதல் - அமைச்சர் உதயநிதி கண்டனம்

Update: 2023-10-19 10:14 GMT

காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், மருத்துவமனை போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தக் கூடாது என்ற சர்வதேச போர் விதிமுறைகளுக்கு புறம்பாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐநா சபை மற்றும் சர்வதேச வீரர்கள் உள்ளிட்டோர் தலையிட்டு போருக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதியை மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்