நெல்லையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மறைவதற்குள்
ஈரோட்டில் மனைவி கண்முன்னே கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை என்றும், இது போன்ற அவல நிலையை தமிழகம் இதுவரை கண்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.