ஈபிஎஸ் உறவினர் வீட்டில் 4 வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.. வருமானவரித்துறை அதிரடி
ஈரோட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான அலுவலகம்,வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் 4வதுநாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதில், ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் வீட்டில் மட்டுமே கடந்த 7ம் தேதி முதல் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் கிடைக்கும் தகவல்கள், ஆவணங்கள் அடிப்படையில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போன்று ரகுநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் செல்வ சுந்தரம் வீடு மற்றும் முள்ளாம்பரப்பில் உள்ள அவருடைய கட்டுமான நிறுவனத்திலும் வருமானவரித்துறையினர் கடந்த நான்கு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.