"EPSஐ விட.." - கடுமையாக சாடிய டிடிவி தினகரன்

Update: 2024-11-08 16:12 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமமுக கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று முதல் முறையாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம் பெறும் எனக் கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்ததை விட தற்போது சட்டம் ஒழுங்கு, நிர்வாகம், லஞ்சம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் திமுக அரசு மிக மோசமாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். போதை பொருட்களால் இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்