"உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.." கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

Update: 2024-11-12 02:36 GMT

சென்னை ராயப்பேட்டையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சி பணிகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள கள ஆய்வுக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாவட்ட வாரியாக கிளை, வார்டு, வட்ட கழகங்கள், சார்பு அமைப்புகளின் செயல்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்து , அவற்றின் பணிகளை மேம்படுத்த கருத்துகளை பெற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். மேலும் அதிமுக உட்கட்சி செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் பேசி, அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை வெளிப்படைத்தன்மையுடன் கட்சி தலைமைக்கு அறிக்கை வழங்க வேண்டும் கள ஆய்வு குழுவினரை எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், அதனை பாரபட்சமின்றி கட்சிக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், அதன் மீது கட்சி தலைமை உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்